கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் காவல் துறையினர் விசாரணை

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் காவல் துறையினர் விசாரணை
X

காவலர் பயிற்சி பள்ளி.

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் விசாரணை நடத்தி நடத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த மாதம் 25 ம் தேதி நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் விசாரணை நடத்தி நடத்தினர். ஏற்கனவே நடராஜனிடம் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி விசாரணை நடத்திய நிலையில், இரண்டாவது முறையாக கூடுதல் விசாரணை நடைபெற்றது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!