கோவையில் புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவையில் புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 336 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2384 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
ai healthcare products