ஆனைகட்டி அருகே மாயமான காட்டு யானை; தேடும் பணி தீவிரம்

ஆனைகட்டி அருகே மாயமான காட்டு யானை; தேடும் பணி தீவிரம்
X

கோவை, ஆனைகட்டி பகுதியில், மாயமான காட்டு யானையை தேடும் பணியில் வனத்துறையினர்

Wild Elephant -ஆனைகட்டி அருகே, காயமடைந்த நிலையில் மாயமான காட்டு யானை, தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.

Wild Elephant -தமிழக கேரள எல்லை கொடுங்கரை பகுதியில், 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வாயில் காயத்துடன் காணப்பட்டது.

கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் ஏழு குழுக்களும், கேரள வனத்துறை சார்பில் நான்கு குழு அமைக்கப்பட்டு, காயமடைந்த காட்டு யானையை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை செங்குட்டை குட்டை காடு பகுதியில் வனத்துறை அதிகாரிகள் அந்த காயமடைந்த யானையை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அந்த யானையின் நடமாட்டம் குறித்து தற்போது கண்காணித்து வருகின்றனர். அந்த காட்டு யானை சமதள பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை கொடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயம் அடைந்த யானைக்கு பாதுகாப்புக்காக டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து கலிம் கும்கி யானையும் முத்து (அரிசிராஜா) என்கின்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது.


காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை டாக்டர்கள் சுகுமார், ஆனைமலை பகுதியில் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் சதாசிவம் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் இந்த அடிபட்ட யானை நீலாம்பதி - ஊக்கையினூர் மலை பகுதியில் இருக்கலாம் என கருதி வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர். அடிபட்ட யானையை கடந்த மூன்று நாட்களாக, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!