கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்
X

அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பு.

ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

இன்று ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை ராஜவீதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி, திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால ஆட்சியில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பிரச்னைகள் இருந்துவந்ததாக குற்றம்சாட்டிய அவர், திமுக கூட்டணி ஆட்சியமைத்தால், கோவை மாநகராட்சியில் தூய்மையான நிர்வாகம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு மக்கள் எதிர்கொண்டு வந்த அனுமதி கிடைக்காத நிலை மாற்றப்படும் எனவும், விரைவாக வீடு கட்ட ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, அவருக்கு திமுக மகளிர் அணியினர் சால்வை அணிவிக்க வந்த போது, பெண் குழந்தை ஒன்றை கையில் வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!