/* */

கோவையில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோவையில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில்  லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், சுங்கக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், வாகன காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்புகளைச் சார்ந்த 100 க்கும் மேற்ப்ப‌ட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பல்வேறு வித கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அவற்றை ரத்து செய்து, லாரி தொழிலை நம்பியுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 18 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  குண்டர் தடுப்பு சட்டம் என்றால் என்ன? யாரையெல்லாம் குண்டாஸில் கைது...
 2. அரசியல்
  செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?
 3. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 4. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 5. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 7. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 8. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 9. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 10. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை