தமிழகத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெறும்: மேயர் வேட்பாளர் கல்பனா

தமிழகத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெறும்: மேயர் வேட்பாளர் கல்பனா
X

கல்பனா ஆனந்தகுமார்

கோவை மாநகராட்சியை தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன் என்று, மேயர் வேட்பாளர் கல்பனா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கல்பனா வெற்றி பெற்றார். 40 வயதான இவர், முதல்முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது, திமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னைத் தேர்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து, கோவை மாநகராட்சியை தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன். கோவை நகரில் குடிநீர் வசதி, சாலை வசதி, என அனைத்தையும் முதல்வர் ஆசியுடன் செய்து தருவேன் என்றார். கோவை மாநகராட்சி முதல் பெண் மேயர் கல்பனா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!