கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீஸாரின் விசாரணை நிறைவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நிறைவடைந்தது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நவீன் பாலாஜி என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.சென்னை சி ஐ டி நகர் , ஷைலி நிவாஷ் அபார்ட்மெண்டில் வருமானத்துறை சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் நவீன் பாலாஜியிடம் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தனியார் ரெசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் இந்த விசாரணை மேற்கொண்டனர்.சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படியில் மணல் ஓ.ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அதே வருமான வரித்துறை ஆவணத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் (ocean spray resort ) என்ற தனியார் ரெசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நிறைவு பெற்றது.கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பாண்டிச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரிடம் கோவையில் தனிப்படை போலீசார் விசாரனையில் ஈடுபட்டனர்.கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது
இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர் இந்த வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று சென்னை கோவை உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது வரை 220 பேரிடம் விசாரணை நடத்த பட்டு உள்ளது இந்த வழக்கின் முக்கியமாக சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி சசிகலா உறவினர் விவேக், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா, மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரர் சிபி, அதிமுக பிரமுகர் அனுபவ ரவி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பிஜின் சகோதரர் மோசஸ், மர வியாபாரி சஜீவன், சகோதரர் சுனில் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடை பெற்றது.
செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை மணல் வியாபரி ஆறுமுக சாமிடமும் மூன்று நாளாக தனிப்படை போலீசார் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கோட நாடு பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் குறித்து கேள்விகல கேட்கப்பட்டுள்ளது.தந்தை ஆறுமுக சாமியிடம்தனித்தனியாக தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் இன்று நவீன் பாலாஜி என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu