கேந்திரிய வித்யாலயா பள்ளி தூய்மை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர்
கர்னல் பாண்டியன்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கர்னல் பாண்டியன். முன்னாள் இராணுவ அதிகாரியான இவர், சரவணம்பட்டி பகுதியில் செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கோவை மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் டெண்டர் முறையில் ஒப்பந்தம் பெற்று தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தூய்மைப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தத்தை தொடர பள்ளியின் முதல்வர் அழகேந்தி, ஒப்பந்ததாரர் பாண்டியன் மாதம்தோறும் 20,000 ரூபாய் லஞ்சத்துடன், தனது வீட்டில் தூய்மைப்படுத்தும் பணிகளையும் செய்து தரவேண்டும் என நிர்பந்தம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் அழகேந்தியிடம் தூய்மைப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் தொடர்பாக பேசிய போது அவர் லஞ்சம் கேட்பது கர்னல் பாண்டியன் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் அழகேந்தி மீது டில்லியில் உள்ள கேந்திர வித்யாலயா சங்கேதன் அமைப்புக்கு ஈமெயில் மூலம் புகார் அளித்தார். இந்த புகார் மனு விசாரிக்க ஹைதராபாத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளி முதல்வரான அழகேந்தி மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu