பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பார்சல் அலுவலகங்களில் எந்த மாதிரியான பொருட்கள் அனுப்பப் படுகிறது என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கோவை வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் மற்றும் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பாபர் மசூதி தினம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கையாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu