புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
X

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்.

முற்றுகை போராட்டத்தில் புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை, மாணவர்கள் எரிக்க முயன்றனர்.

நீட் தேர்வு மற்றும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 20 பேர் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை, மாணவர்கள் எரிக்க முயன்றனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடந்து மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் கூறும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், குலக்கல்வி முறையை மீண்டும் புகுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும் இந்த அரசு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!