கோவையில், வரும் 24ல் போலீஸ் - பொதுமக்கள் கிரிக்கெட் போட்டி

கோவையில், வரும் 24ல் போலீஸ் - பொதுமக்கள் கிரிக்கெட் போட்டி
X

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

Cricket Match News -கோவை மாநகர காவல் துறை சார்பில், வரும் 24ம் தேதி முதல், போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Cricket Match News -இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகர காவல் துறை சார்பில், 10 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 64 அணிகளும் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள், வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. காவல் துறை அணிகள் தனியாகவும், பொதுமக்கள் அணிகள் தனியாகவும் போட்டிகள் நடக்கும். அக்டோபர் 2ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில், போலீஸ் மற்றும் பொதுமக்கள் அணிகள் இடையேயான போட்டி நடக்கும்.

காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழலை உருவாக்கவும், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி, போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இந்த போட்டித்தொடர் நடத்தப்படுகிறது. மேலும், இளைஞர்கள் வாகனங்களில் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையில், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது