கோவையில், நகைக்கடையில் கவரிங் நகையை வைத்து, தங்க நகையை திருடிய தாய் - மகள் கைது

கோவையில், நகை திருடிய தாய், மகள் கைது
Theft Case -கோவை பெரியகடை வீதியில் சிவகுமார் என்பவர், 15 ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஜனவரி மாதம் வந்த இரண்டு பெண்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐந்து சவரன் தங்க சங்கிலியை வாங்க எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த தங்க சங்கிலிக்கு பதிலாக, கவரிங் நகையை வைத்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நகைக்கடையில், நகைகளை பரிசோதித்த போது கவரிங் நகை இருப்பது தெரியவந்தது. கோவை பெரியகடை வீதி போலீசில், நகை கடை உரிமையாளர் சிவகுமார், புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை கண்காணித்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமதி (50) மற்றும் அவரது மகள் பிரியதர்ஷினி (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu