கோவை சம்பவத்தை, தமிழக போலீசாரே விசாரித்தால், இன்னும் பல உண்மைகள் வெளிவரும்- ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்

கோவை சம்பவத்தை, தமிழக போலீசாரே விசாரித்தால், இன்னும் பல உண்மைகள் வெளிவரும்-  ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
X

கோவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா எம்எல்ஏ, செய்தியாளர்களை சந்தித்தார்.

Coimbatore News Today in Tamil -கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை, தமிழக போலீசாரே விசாரித்தால், இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என, மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கோவையில் கூறினார்.

Coimbatore News Today in Tamil -கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை,நேரில் சந்தித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ, அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்தோம். ஏற்கனவே நடந்த சம்பவத்தின்போது, மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர். பின்னர் கோவை சகஜ நிலைக்கு திரும்ப, சில ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில், தற்போது அமைதியான கோவை மாநகரில் அமைதி நிலைநாட்டுவது அனைவரின் கடமை. இனி இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடக்கக் கூடாது. இதன் கவலைகளை, கமிஷனரிடம் பகிர்ந்து கொண்டோம். கமிஷனர் எடுத்த முயற்சிகளை, எங்களிடம் தெரிவித்தார். கடந்த குண்டுவெடிப்பின் போது, ராதாகிருஷ்ணன் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு, தற்போது பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம், ஒற்றை ஓநாய் தாக்குதல் என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன..?அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும். இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜெகர்ஹான் உடன் இவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வருகிறது. அதே நேரத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற நிலையில், பின்னணி உள்ளது.

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களாலும் இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது. இவர்கள் யாரின் அரசியல் லாபத்திற்காக கையாட்களாக இருக்கிறார்கள் என்பது எங்களது கேள்வியாக உள்ளது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க, சிறப்பான முறையில் விசாரணை செய்ய வேண்டும். அதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு, உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் துறை உள்ளது என்று போலீஸ் கமிஷனர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். பேட்டியில் அவர், 2019 க்கு முதற்கொண்டு இதுபோன்ற சீர்குலைவு நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது என்கிறார். இன்னொரு அதே பேட்டியில், கடந்த அதிமுக ஆட்சியில் போலீஸ்துறையின் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டது என்கிறார். இப்படி போலீஸ் துறை சிறப்பாக செயல்பட்டிருந்தால் 2019 முதல் எப்படி சீர்குலைவு நடைபெற்று இருக்கும். இதற்கு தமிழக போலீஸ் துறை பொறுப்பு அல்ல. போலீஸ்துறை அதிகாரிகள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மாலைக்குள் அனைத்து விஷயங்களையும் கொண்டு வந்தது தமிழக போலீசார். எனது கருத்துப்படி கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால், இன்னும் பல உண்மைகள் வரும். என் ஐ ஏ எப்படி செய்யப் போகிறது என்பது ஒரு கேள்விக்குறிதான்.

இவ்வாறு ஜவாஹிருல்லா எம் எல் ஏ கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story