ஆயுள் சிறைக் கைதிகளை விடுவிக்கக்கோரி மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுசெயலாளர் தமிமூன்அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தியாகு, அ.மார்க்ஸ் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சாதி, மத வேறுபாடின்றி 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளை அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நீண்ட காலமாக இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட பலர் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும், 161வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இஸ்லாமியர்களின் விடுதலையை அரசு சாத்தியபடுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 100 நாட்களுக்குள் தமிழக அரசு விடுதலையை உறுதிபடுத்தவில்லை எனில், தொடர் போராட்டம் நடத்த போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறுகையில், தமிழக சிறைகளில் பத்தாண்டுகள் கடந்து முன் விடுதலைக்கு வாய்ப்பில்லாமல் வாடி வதங்கி கொண்டிருக்கக்கூடிய ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையை வலியுறுத்தி இன்றைய தினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழக சிறைச்சாலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வரக் கூடிய நிலையில், அங்கே மனித உரிமைகள் மீறப்பட்டு மனித உரிமைகள் தடுக்கப்பட்டு பலரது வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தான் அடையாள நிமித்தமாக கோவை சிறைச்சாலை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் சாதி மத பேதமின்றி இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பின் கீழ் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆய்வு கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பலர் நோயாளிகளாக உள்ளனர்.
பேரறிவாளன் நெஞ்சு வலியால் தான் வெளியே வந்துள்ளார். சர்க்கரை வியாதி, நெஞ்சு வலி துன்புறுகிறார்கள். மனிதாபிமானத்தின் அடிப்படையில் மாநில அரசுக்கு என்று சில உரிமைகள் உள்ளது 161 ஆவது சட்டப்பிரிவு உள்ளது அதை பயன்படுத்தித் தமிழக முதல்வர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu