இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு
X

விழிப்புணர்வு கலை பயணத்தை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பங்கேற்றுள்ளன.

தமிழக முதல்வர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அத்திட்டம் குறித்தான சில சந்தேகங்கள் மக்களிடையே காணப்பட்டது. எனவே தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடத்த திட்டமிடப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு கலைப்பயண வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக கிராம புறங்களில் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலை பயணத்தை மேற்கொள்ள உள்ள கலைக்குழுவினருக்கும் கல்வி துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!