மோசடி வழக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகி தற்கொலை முயற்சி: ஒருவர் மரணம்

மோசடி வழக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகி  தற்கொலை முயற்சி: ஒருவர் மரணம்
X
கோவையில் மோசடி வழக்கு தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தபோது ஒருவர் உ.யிரிழந்தார்

கோவையில் மோசடி வழக்கு தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்ததில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா (45). தொழிலதிபர். இவர் தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்னையில் இருந்தது. இந்தநிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவருமான பிரசன்னா (41) என்பவர் அறிமுகமானார். அவர் இடம் சம்மந்தமான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியதாக தெரிகிறது.

அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ரூ.25 லட்சத்து 59 ஆயிரத்து 200 கொடுத்ததாக தெரிகிறது. மேலும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இட பிரச்னையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்ய முயன்று உள்ளார். இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி (31), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (28), பிரகாஷ் (58) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணி துணைத் தலைவர் பிரசன்னா உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தன்னுடைய குடும்பத்துடன்(4பேர்) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பிரசன்னாவின் தயார் சிகிச்சை பலனின்றி உரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் 3"பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து தற்கொலை செய்யப் போவதற்கு முன்பு வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இதில் இந்த வழக்கு பொய்யானதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆழ்கியுள்ளதாகவும், தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்க கூடாது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!