கோவில் நகை உருக்க எதிர்ப்பு: கோவையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோவில் நகை உருக்க எதிர்ப்பு: கோவையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

கோவை காந்திபுரம் பகுதி முனியப்பன் கோவில் அருகில்,  இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். 

நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தை கண்டித்து, கோவையில் இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாடம் நடத்தினர்.

கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் திட்டத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாடம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அலகு குத்தி, ஆண்டி வேடமணிந்து குழந்தைகளுக்கு கடவுள் மற்றும் பாரத மாதா வேடமணிந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் கிஷோர், தமிழக அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதால், தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ஒருகால பூஜை கூட நடைபெறாத கோவில்கள் பல உள்ளதாகவும், அதனை சரி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story