கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை

கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை
X

சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.

கோவையில் மதிய நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு மழை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவையில் மதிய நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கன மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சுமார் ஒரு மணி அளவில் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், சிவானந்தா காலனி, வடகோவை, உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், காந்திபுரம், சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business