/* */

கோவையில் கனமழையால் வேரோடு சாய்ந்த மரங்கள்: கார் சேதம்

கோவையில் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.மழை பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கோவையில் கனமழையால் வேரோடு சாய்ந்த மரங்கள்: கார் சேதம்
X

ரெயின்போ பகுதியில், மரம் விழுந்து சேதமடைந்த கார்.

கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி, நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக, கோவை-அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் 20 ஆண்டுகள் பழமையான பூவரசம் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் அதிகாலை நேரம் என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தீயணைப்பு துறையினர், மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கோவை ரெயின்போ பகுதியில் மரம் விழுந்ததால், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் சேதமடைந்தது. மரத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 8 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. கோவை மாநகர்
    வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
  6. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  7. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  9. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  10. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...