கோவையில் மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட்' திட்டம்: மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள்

கோவையில்  மீண்டும்  ஹேப்பி ஸ்ட்ரீட் திட்டம்: மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள்
X

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை விளையாடினர்.

கோவை ஆர். எஸ். புரத்தில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை ஆர். எஸ். புரத்தில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தனியார் நாளிதழின் முயற்சியாக கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற முயற்சி துவங்கப்பட்டது. இந்த முயற்சியின் படி தனியார் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகங்கள், அரசுத் துறைகள் மற்றும் காவல்துறை இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன்படி நகரின் குறிப்பிட்ட பகுதியில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு சாலையில் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பொதுமக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்ற பொழுதுப்போக்குகளில் ஈடுபடுவர்.

நகரங்களில் காணப்படும் முக்கிய பிரச்னைகளான போக்குவரத்து நெரிசல், பாதசாரிகளுக்கான நடக்க இடம் இல்லாமல் போவது, சைக்களுக்கான குறைவான மதிப்பு மற்றும் காற்று மாசுபாடு போன்ற இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இம்முயற்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இப்போது குறைந்துள்ள நிலையில் வரும் இன்று ஞாயிறு முதல் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு குழந்தைகள் மற்றும் பெரியோர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள டி பி ரோட்டில், தலைமை தபால் அலுவலகம் முதல் மேக்ரிகார் சாலை வரையான பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆர்.எஸ்.புரம், டி.பி. சாலையில் குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர். குழந்தைகளோடு பெரியவர்களும் தங்கள் வயதை மறந்து ஹேப் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!