/* */

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாட்டியின் கழுத்தை அறுத்த பேரன் கைது

கோவயைில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாட்டியின் கழுத்தை அறுத்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாட்டியின் கழுத்தை அறுத்த பேரன் கைது
X
கைது செய்யப்பட்ட கார்த்தி.

கோவை செல்வபுரம் அடுத்துள்ள தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் சரியாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றிவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டு செலவிற்கு பணம் கேட்டு பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்ததால் வட்டிக்கு பணம் வாங்கி கார்த்திக்கு கொடுத்துள்ளார் பாட்டி மீனா. இந்த நிலையில் தொடர்ந்து சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்தது மட்டுமல்லாமல், பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் உணவருந்த வந்த கார்த்தியிடம் வட்டிக்கு வாங்கிகொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.இதில் பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் வலிதாங்க முடியாமல் அலறிய மீனாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கழுத்தில் காயமடைந்த மீனாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் காவல் நிலைய போலிசார் பாட்டியின் கழுத்தை அறுத்த பேரன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு கார்த்தியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Updated On: 15 May 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!