கோவையில் பொழுது போக்கு அம்சங்களுடன் களை கட்டி வரும் அரசு பொருட்காட்சி.

கோவை அரசு பொருட்காட்சியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
கோவையில் பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி களை கட்டி வருகிறது.
Government Exhibition in Coimbatore-கோவை காந்திபுரம் அருகே உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்பட 27 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்கு என மொத்தம் 33 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பொழுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
அரசு பொருட்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளிகள் அழைத்து வரும் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியை நேற்று வரை 26 நாட்களில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்காக பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை கண்டு களித்து செல்கிறார்கள்.
இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் எங்கும் செல்ல முடியவில்லை. அப்போது தான் காந்திபுரம் அருகே ஜெயில் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கிய தகவல் வரவே குழந்தைகளுடன் அங்கு சென்றோம் .அங்கிருந்த ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். நாங்கள் அரசு பொருட்காட்சிக்கு சென்றது வாரவிடுமுறை என்பதால் அப்போது கோவை மாநகர போலீசார் சார்பில் வளர்ப்பு நாய்களில் சாகச கண்காட்சி நடைபெற்றது.
இதில் நாய்களின் சாகசம், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது. இதுதவிர அங்கு இருந்த ஸ்டால்களில் மிக குறைவான விலையில் அதிக பொருட்களை வாங்கி வந்தோம். மீண்டும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லுமாறு எங்கள் குழந்தைகள் கூறி வருகின்றனர். அந்தளவுக்கு அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu