கழுத்து தண்டுவடத்தில் சிக்கிய தையல் ஊசி: வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

கழுத்து தண்டுவடத்தில் சிக்கிய தையல் ஊசி: வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்
X

கழுத்தில் இருந்த தையல் ஊசி

சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கழுத்து தண்டுவடத்திற்கு அருகே, தையல் ஊசி இருப்பது தெரிய வந்தது.

கோவை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கடந்த 2 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்து அறுபட்டதிற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் கழுத்தில் ஏற்பட்ட காயம் குணமான பின்னரும், அவருக்கு கழுத்து வலி இருந்துள்ளது. இதனை அடுத்து அப்பெண்ணிற்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கழுத்து தண்டுவடத்திற்கு அருகே, தையல் ஊசி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவர்கள் அவரிடம் கேட்டபோது தற்கொலை செய்துகொள்ள தான் அந்த ஊசியை கழுத்தில் குத்தியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவர்கள் அதனை பரிசோதித்த போது மூச்சு குழாயில் இருந்து கழுத்து தண்டுவடத்திற்கும் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்க்கு அருகே இந்த தையல் ஊசி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுப்பது என்பது சவாலாக இருந்தது. இதனை அடுத்து தண்டுவட மருத்துவர்கள் ரத்த நாள மருத்துவர்கள் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் மயக்கவியல் மருத்துவர்கள் ஒன்றிணைந்து அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து 7.5 சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசியை அகற்றினர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், அப்பெண்மணி தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஊசியை தனது கழுத்தில் தையல் ஊசியால் குத்தி உள்ளார். அந்த ஊசியானது கழுத்தின் உள்ளே சென்று தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்லக்கூடிய முக்கிய ரத்த நாளத்திற்கு அருகே இருந்ததால் இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சவாலாக இருந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்ததால் மிகவும் கவனத்துடன் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுஎந்த ஒரு பாதிப்புமின்றி அகற்றி சாதனை படைத்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil