/* */

இணையதளம் மூலம் பாலியல் வேலை கொடுப்பதாக மோசடி செய்த கும்பல் கைது

இணையதளம் மூலம் பாலியல் வேலை கொடுப்பதாகக்கூறி பண மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இணையதளம் மூலம் பாலியல் வேலை கொடுப்பதாக மோசடி செய்த கும்பல் கைது
X

இணையதள செயலி மூலம் பெண்களை பாலியல் வேலைக்கு எடுப்பதாக பணம் மோசடி செய்த கும்பலை கைது செய்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இணையதள செயலி மூலம் பெண்களை பாலியல் வேலை கொடுப்பதாக ஏமாற்றிய கும்பலை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் மேலும் கூறியதாவது: பெங்களூரை தலைமை இடமாக கொண்ட லோகேண்டா என்ற வளைதளத்தில் செல்போன் எண்கள் பதிந்து பெண்களை பாலியல் வேலை கொடுப்பதாக பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய கும்பலை கைது செய்துள்ளதாகவும்,ஏமாற்றப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் 12 பேர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதில் ரிஸ்வான் பெண்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளதாகவும்.ரிஸ்வான் என்ற முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். இவர்கள் போலியான முகவரிக்கு வரச்செல்லி, இணையதளம் மூலம் பணத்தை வசூலித்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்துள்ளதாகவும் 360 டிகிரியில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆந்திராவில் இருந்து கஞ்சா அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கஞ்சா சாக்லேட் என்பது ராஜஸ்தானில் இருந்து வருவதாகவும், இதுகுறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றுள்ளாதாக தெரிவித்தார்.

Updated On: 4 Aug 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்