கோவையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைது

கோவையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைது
X

அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினர்.

தேர்தலை நியாயமாக நடத்த கோரியும், பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தை வரவழைக்க கோரியும் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் தேர்தலை நியாயமாக நடத்த கோரியும், பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தை வரவழைக்க கோரியும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டமானது தொடரப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால் காவல் துறையினர், வேலுமணி 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!