சின்ன வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சின்ன வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் அழுகிய வெங்காய செடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவையிலர் சின்ன வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 25,000 ஹெக்டர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தக்காளி அறுவடை காலங்களில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

விவசாயம் செய்த கூலி கூட கிடைக்க பெறாமல் இருப்பதாகவும் எனவே அரசு தோட்டக்கலை அலுவலர்களை நியமனம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்து அரசாங்கமே சின்ன வெங்காயத்தினை கொள்முதல் செய்யவும், நியாய விலை கடை மூலமாக விற்பனை செய்யவும் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிடவும் கோரிக்கை விடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!