மின்வெட்டு என பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

மின்வெட்டு என பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
X

வாலாங்குளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு.

பாதிப்பு உள்ள பகுதியை தெரிவித்தால் உடனடியாக மின்சாரம் வினியோகம் அளிக்கப்படும்.

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் வடிகால் அமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். மேலும் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் இராஜ கோபால் சுன்காரா உடனிருந்தனர். இதனை தொடர்ந்து இரயில் நிலையத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 26 குளங்கள் நிரம்பி உள்ளது. மழையின் அளவு அதிகளவில் பெய்த்துள்ளது எனவும் குளங்களில் வடிகால் பணிகளை ஆய்வு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் 31 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாவும், 7 பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது எனவும் பாதிப்பு இல்லாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் வெட்டு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள், பாதிப்பு உள்ள பகுதியை தெரிவித்தால் உடனடியாக மின்சாரம் வினியோகம் அளிக்கப்படும்.

150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களை பெற்றுள்ளோம். விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள பணி செய்து வருகிறோம் என தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் சாலைகள் மிக மோசமாக உள்ளது. சிறப்பு நிதிகளை பெற்று சாலைகளை மேற்க்கொள்ள இருக்கிறோம். வடக் கிழக்கு பருவ மலைக்கு அனைத்து துறைகளுடன் ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!