கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
X

கோவை அருகே பிடிபட்ட போலி 2000    ரூபாய் நோட்டுகள்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது அங்கு கட்டு கட்டாக 2000 ரூபாய் போலி நோட்டுகள் அட்டைப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப்,4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இரிடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 8 Oct 2022 4:15 PM GMT

Related News

Latest News

 1. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
 3. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 4. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 5. கீழ்பெண்ணாத்தூர்‎
  புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம்; துணை சபாநாயகர் ஆய்வு
 6. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 7. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 8. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...