5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் கல்வி கொள்கையால் பலன் கிடைப்பதில்லை -ஆளுநர் ஆர். என். ரவி
![5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் கல்வி கொள்கையால் பலன் கிடைப்பதில்லை -ஆளுநர் ஆர். என். ரவி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் கல்வி கொள்கையால் பலன் கிடைப்பதில்லை -ஆளுநர் ஆர். என். ரவி](https://www.nativenews.in/h-upload/2022/03/11/1495049-img-20220311-wa0032.webp)
ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி போது எடுத்த படம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென் மண்டல துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது, கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே, நாம் எல்லோரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும். இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதை பார்க்க வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 65 ஆண்டுகள் தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலம் தான். அரசுகள் 5 ஆண்டுகள் தான் அதிகாரம் உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள். அதுதான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறது. அதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது. அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்னைகள் , சமூக பதற்றங்கள் இருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை. இதனால் மாநிலங்களுக்கு இடையே,மண்டலம் வாரியாக சமநிலை இருப்பதில்லை.
2014 -ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பார்வை மாறிவிட்டது. சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது. 18 மொழி செப்புடையாள் என பாரதியின் பாடலை போல ஒரே சிந்தனையுடன் இருக்க வேண்டும். மேலும், 2047-ல் நமது 100-வது சுதந்திர தினத்தில் உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறி இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு, இது போன்ற கூட்டங்களில் துணைவேந்தர்கள் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என ஆலோசிக்க வேண்டும். மாணவர்கள் 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் பிஎச்டி பட்டம் பெற்று உள்ளனர். இது நல்ல விஷயம். நாட்டுக்கு பயன்படும் வகையிலான ஆராய்ச்சிகளை பி.எச்.டி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மற்றும் , மத்திய அரசு 2014 முதல் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu