தொடர் மழை எதிராெலி: கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை எதிராெலி: கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
X

சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.

ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனிடையே அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் டிவிட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக பள்ளிக்கு மாணவர்கள் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பியதால் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!