கோவையில் சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

கோவையில் சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி
X

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்

கோவையில், சாக்கடை நீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாநகர பகுதியில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கோவை காந்திபுரம் அருகே அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் அருகில் உள்ள ஆவாரம்பாளையம் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கின் நுழைவாயில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறியது.

மழை காரணமாக சாக்கடை கால்வாயில் நீர் அதிகளவு வருவதால், இதுபோன்று சாக்கடை நீர் வெளியேறி வருகிறது. இதனால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சாக்கடை நீர் வெளியேறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை நீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்