/* */

திமுக ஆட்சியில் சென்னையில் வடிகால் அமைக்கவில்லை- முன்னாள் அமைச்சர் வேலுமணி காட்டம்

DMK News Tamil -திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், சென்னையில் எந்த வடிகாலும் அமைக்கப்படவில்லை என, முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

திமுக ஆட்சியில் சென்னையில் வடிகால் அமைக்கவில்லை- முன்னாள் அமைச்சர் வேலுமணி காட்டம்
X

முன்னாள் அமைச்சர் வேலுமணி.

DMK News Tamil -அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையில் வடிகால் அமைக்கவில்லை; தற்போது ஓராண்டு கால திமுக ஆட்சியில்தான் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறும் திமுக அமைச்சர்கள், இந்த திட்டத்திற்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கினார்கள் எவ்வளவு நிதியில் அந்த கட்டுமான பணிகள் நடைபெற்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கேள்வி எழுப்பினார்.

கோவை சாய்பாபாகாலனி பகுதியில், அதிமுக வின் 51வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், ஜெயராமன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஊட்டி அர்ச்சுணன் மற்றும் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது;

கட்சி தொடங்கி, 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தது அதிமுக மட்டுமே. இலங்கை தமிழர்களுக்கு அதிகமான உதவிகளை செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். எம் ஜி ஆர் மறைவின் போது 17 லட்சம் தொண்டர்களைக் கொண்டிருந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக மாற்றியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. காலணி முதல் மடிக்கணினி வரை ஒவ்வொரு பொருளையும் இலவசமாக கொடுத்தவர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கிய நிலையில், தற்போது திமுக ஆட்சியில் அதனை நிறுத்திவிட்டதாகவும் பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொலை கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு 'சூப்பர் முதல்வர்' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு ஒரு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின். மக்களை ஏமாற்றம் அரசாக திமுக அரசு உள்ளது. தற்போது சென்னையில் மழை வெள்ளம் வந்ததற்கு அதிமுகவில் ஒன்றுமே செய்யவில்லை தாங்கள் ஆட்சிக்கு வந்து செய்து விட்டோம் என தமிழக அரசு கூறுகிறது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, தாம்பரத்தில் ஒரு மணி நேரத்தில் 52 சென்டிமீட்டர் மழை பெய்தபோது அமைச்சர்கள் அனைவரும் நேரடியாக களத்தில் இருந்தோம். கஜா புயல் பாதிப்பின் போது ஒரு மாதம் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நேரடியாக இருந்து மக்களை காப்பாற்றினோம். இன்று எந்த பணியும் நடைபெறுவதில்லை.

தற்போது திமுக ஆட்சியில் வடிகால்கள் அமைத்ததாக கூறும் அமைச்சர்கள் எந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து வடிகால்கள் அமைத்தார்கள் என கூற வேண்டும். 2014 ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்த 4 ஆயிரம் கோடி ரூபாய் மூலம், படிப்படியாக மழை நீர் வடிகால்கள் அமைத்து தண்ணீர் தேங்குவது குறைக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை செய்துள்ள கட்டுமானம் பணிகள் எல்லாம் அதிமுக ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நடந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா