உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் இதுவரை 10 இடங்களில் திமுக வெற்றி

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் இதுவரை 10 இடங்களில் திமுக வெற்றி
X

வெற்றி பெற்றவரை கொண்டாடும் தொண்டர்கள்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 13 பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 13 பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55,280 பேர் வாக்களித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதுவரை கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

அதன்படி, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2312 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் நாரயண மூர்த்தி 1451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவு வேட்பாளர் சரஸ்வதி 834 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூரில் நடைபெற்ற கிராம ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் மொத்தம் 6 ஆயிரத்து 555 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் கலைவாணி 4 ஆயிரத்து 372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மொத்தம் 10 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் தேக்கம்பட்டி 15 வார்டில் 591 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதர்வு வேட்பாளர் 379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெள்ளியங்காடு 10வது வார்டில் 411 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதர்வு வேட்பாளர் முருகம்மாள் 213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெள்ளாதி 3வது வார்டில் 767 வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக ஆதர்வு வேட்பாளர் சுரேஷ் 372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கள்ளிபாளையம் 5வது வார்டில் 272 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் மனோன்மணி 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். போகம்பட்டி 6வது வார்டில் 376 வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக ஆதரவு வேட்பாளர் சந்தியா 214 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாதம்பட்டி 3வது வார்டில் 361 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குருடம்பாளையம் 9வது வார்டில் 913 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிணத்துக்கடவுமுத்தூர் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 288 வாக்குகள்.பதிவாகின. இதில் திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜமீன் முத்தூர் 2வது வார்டில் 422 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் செந்தில்குமார் 289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சீராபாளையம் 4வது வார்டில் 334 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் ஜெயபிரகாஷ் 168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து அன்னூரில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!