கோவையில் 7 நகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக

கோவையில் 7 நகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக
X

பைல் படம்.

மொத்தம் உள்ள 198 இடங்களில் 159 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

கோவை மாவட்டத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், கூடலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன. 7 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 198 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 159 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக 23, சுயேச்சை 7, காங்கிரஸ் 6, சிபிஎம் 1, மதிமுக 1, பாஜக 1 இடங்களில் வெற்றி பெற்றது. 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதிமுக ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்றவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!