பாஜக மோசடி மூலமாக மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமல்ஹாசனை ஜெயித்ததாக திமுக புகார்

பாஜக மோசடி மூலமாக மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமல்ஹாசனை ஜெயித்ததாக திமுக புகார்

 பாஜக விலிருந்து  விலகி திமுகவில் சேர்ந்த நிர்வாகி மைதிலி வினோ

தொகுதியை கவனிக்காமல் இருப்பதாக வானதிசீனிவாசன் மீது பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி மைதிலி வினோ குற்றம் சாட்டியுள்ளார்

மோசடி மூலமாக - மக்கள் நீதி மைய தெற்கு தொகுதி வேட்பாளர் திரு. கமலஹாசனை ஜெயித்த தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் - தெற்கு தொகுதி பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் பிஜேபி கட்சி பணிக்காக வடமாநிலத்தில் கட்சி வேலை செய்து வருகிறார் என பாஜக வில் இருந்து விலகி தற்போது திமுக வில் இணைந்துள்ள மைதிலி வினோ குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக வில் இருந்து விலகி தற்போது திமுக வில் இணைந்துள்ள மைதிலி வினோ பாஜகவின் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் அவர்கள் குறித்து பேசி வீடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.

அவ்வீடியோ பதிவில் மைதிலி வினோ பேசியதாவது:தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நீங்கள் கமலஹாசனை பத்தியோ, உதயநிதி ஸ்டாலின் மாநில இளைஞரணி பொறுப்பிலிருந்து தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்களுக்காக பணி செய்கிறார். இவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும் வானதி சீனிவாசனுக்கு இல்லை. மேலும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற நீங்க உங்க தொகுதி பிரச்னையை பாருங்கள். அதில் அதிக கவனத்தை செலுத்துங்கள். தொகுதி மக்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். அதை விட்டுவிட்டு தங்களுடைய பாஜக கட்சிப் பணியாற்றிக்கொண்டு ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்து வரும் நீங்கள்.தொகுதி மக்களுக்காக ஏதாவது செய்யணும் என்பதற்காக தொகுதிக்கு வந்து நேரில் சந்தித்து பேசும் கமலஹாசனை கேவலப்படுத்துற மாதிரி பேசுறது உங்களுடைய அறியாமையை காட்டுகிறது என்று தற்போது திமுகவில் இணைந்துள்ள மைதிலி வினோ.

Tags

Next Story