வடமாநில தொழிலாளர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை!

வடமாநில தொழிலாளர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை!
X

பேச்சுவார்த்தைக்கு வரும் வட மாநில தொழிலாளர்கள்

கோயம்புத்தூரில் இதுமாதிரி போலி வீடியோ பரப்பியதாக ஒரு வழக்கு பதியபட்டுள்ளது. இதுபோல் தவறான, போலியான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தனர்.

கோயம்புத்தூர் சிட்கோ பகுதியில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோவை சிட்கோ பகுதியில் பணிபுரிந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவர்களுக்கு இருக்கும் பயம் குறித்து தெளிவுபடுத்தினர். இங்கே பரப்பப்படும் வீடியோக்களும் புகைப்படங்களும் போலியானவை அதை பார்த்து நீங்கள் பயப்படத் தேவையில்லை. தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதை அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கினர்.

வடமாநில தொழிலாளர்களுக்கு புரியும் மொழியில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களையும் சந்தித்தனர். அதில் தமிழகத்தில் நிகழ்ந்ததாக கூறி பரப்பப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் போலியானவை, இங்கு வடமாநில தொழிலாளர்களை யாரும் தாக்கவில்லை. அப்படி தவறான தகவல்களை போலியாக சிலர் பரப்பி வருகின்றனர். அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்கும் என்பன உட்பட பல விசயங்களை தெளிவுபடுத்தியதாக கூறினார்.

செய்தியை இந்தி மொழியில் அறிக்கையாக அளித்திருப்பதாக கூறிய அவர், ஹிந்தியின் சரளமாக பேசும் அதிகாரிகளையும் அவர்கள் பகுதிகளில் போட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். போலியான வீடியோக்கள் பரப்பி வரும் நபர்களை கண்காணித்து வருகிறோம்.

கோயம்புத்தூரில் இதுமாதிரி போலி வீடியோ பரப்பியதாக ஒரு வழக்கு பதியபட்டுள்ளது. இதுபோல் தவறான, போலியான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தனர். மேலும் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹிந்தி மொழி பேசும் காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி