பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை  அவமதிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டும், காவி நிற பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது.

கோவை வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் நடத்தி வருகின்றனர். அப்படிப்பகம் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டும், காவி நிற பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அப்படிப்பக நிர்வாகிகளுக்கு தகவல் தெரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த திராவிடர் கழகத்தினர் போத்தனூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தபெதிக, திவிக, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story