டெய்லர் கன்ஹையா லால் கொலைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்

டெய்லர் கன்ஹையா லால் கொலைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்
X

கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இந்து வியாபாரி டெய்லர் கன்ஹையா லால்-யை இருவர் கடைக்குள் புகுந்து தலையை துண்டித்து கொலை செய்தனர். பாஜக முன்னாள் உறுப்பினர் நுபர்சர்மா-வின் பேச்சுக்கு பதிலடி தருவதற்காக இந்த கொலை செய்யப்பட்டதாக ஒரு காணொளி ஒன்றையும் வெளியிட்டனர். அதில் பிரதமருக்கும் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். கொலை செய்ததாக கருதப்படும் முகமது ரியாஷ் மற்றும் கெளஷ் முகமது ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டுமென கூறி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture