/* */

கோவையில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு

நெல்லை மாவட்டத்தில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர்.

HIGHLIGHTS

கோவையில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு
X

பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவின் பேரில் பழைய பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பேரில் கோவை பெரியகடை வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் பழைய கட்டிடம் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் பேரில், அப்பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 10:45 AM GMT

Related News