ரயில்வே பணிமனையில் தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா

ரயில்வே பணிமனையில் தொழிற்சங்கம் சார்பில்  கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா
X

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

ரயில்வே பணிமனையில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே பணிமனையில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. SRMU தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கிருஸ்துமஸ் விழாவில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த தொழிற்சங்கத்தின் சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கேக் வெட்டியும், கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும் , நடனமாடியும் விழா கொண்டாடப்பட்டது. சாண்டா கிளாஸ் வேடம் அணிந்த நபர் கேக்கினை அனைவருக்கும் வழங்கியதுடன், நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட ரயில்வே ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!