காேவை: கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ளம்; அகற்றும் பணி தீவிரம்

காேவை: கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ளம்; அகற்றும் பணி தீவிரம்
X

உப்பிலிபாளையம் மேம்பால சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர்

உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக, சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல மேட்டுப்பாளையம் சாலையில் கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் அருகில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் தேங்கியது.

இதன் காரணமாக அந்தப் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future