ஈமு கோழி மோசடி வழக்கில் தம்பதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஈமு கோழி மோசடி வழக்கில் தம்பதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
X

முனியன் மற்றும் மாரியம்மாள்.

சுமார் 3 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முனியன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீ நித்யா ஈமு மற்றும் பவுல்டிரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி ஈமு கோடி பண்ணை அமைத்து தருவதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி 244 பேர் இவர்களிடம் பணம் செலுத்தியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஈமு பண்ணைகள் அமைத்து தராத நிலையில், நாட்டுக்கோழி பண்ணை அமைத்து தருவதாகவும் கூறி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

சுமார் 3 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து முனியன், மாரியம்மாள், உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில், முனியன், மாரியம்மாள் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, அபராத தொகையை 222 முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!