கோவையில் தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவையில் தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவி

கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.‌

கோவை மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை சற்றே ஓய்ந்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று காலை முதல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.‌

குறிப்பாக சிங்காநல்லூர், ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம், வெள்ளலுர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கடும் அவதியுற்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடியே குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்றனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil