கோவை மாவட்டத்தில் இன்று 550 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம் (பைல் படம்)
கொரோனா தொற்று கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டு வரபட்டது. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு முகாம்கள் நடத்தபட்டது.
இதுவரை 10 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று பதினோறவது முகாம் நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 366 முகாம்களும் மாநகராட்சிப் பகுதிகளில் 184 முகாம்கள் என மொத்தம் 550 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறுகிறது.இதனை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி 100% பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி மருந்தே பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம் என்பதை கருத்தில் கொண்டு தகுதிவாய்ந்த அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி அவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் இரண்டு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்கிடும் நோக்கில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளர்.
சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பொது இடங்களிலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
தற்போது கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் சற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி பெற்று கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu