அரசு விழாவில் பாஜக மாவட்ட தலைவர் பங்கேற்றதால் சர்ச்சை: திராவிட கழகம் கேள்வி

அரசு விழாவில் பாஜக மாவட்ட தலைவர் பங்கேற்றதால் சர்ச்சை: திராவிட கழகம் கேள்வி
X

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உழவர் கூட்டம் நடைபெற்றது.

BJP News Today -அரசு விழாவில் பாஜக மாவட்ட தலைவர் பங்கேற்றதால் அரசு விழாவா? இல்லை கட்சி விழாவா? என திராவிட கழகம் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

BJP News Today -கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உழவர் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங்க் தோமர், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் , பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், வால்பாறை எம்.எல்.ஏ அமல்கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கரும்பு இனப்பெருக்க அதிகாரிகள் மற்றும் தென்னை வாரிய அதிகாரிகள் இந்தி மொழியிலும், தமிழ் மொழியிலும் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் இரு மொழிகளிலும் மாறி மாறி உரையாற்றினர்.

இந்த விழாவில் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இந்தியில் வரவேற்பு தெரிவித்து விட்டு தமிழில் பேசினார். அப்போது தென்னை விவசாயிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். எனவே எங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

விவசாயத்துக்கு மரியாதை குறைந்து வருகின்றது; விவசாயத்திற்கான மரியாதை, வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் மூலமாக நிறைவேற்ற முடியும், மாநில அமைச்சர் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்டம் தொழில் துறையில் மட்டுமல்ல,வேளாண் துறையிலும் கோவை முன்னோடி மாவட்டம் எனவும் தெரிவித்தார். தற்போது தேங்காய்க்கு விலையே இல்லை, தேங்காய் மட்டைக்கும் கூட விலை இல்லை. கொப்பரைக்கும் விலை இல்லை என தெரிவித்த அவர், 140 ரூபாய்க்கு விற்ற கொப்பரை தேங்காய் தற்போது வெறும் 70 ரூபாய்க்கு மட்டும் விலை போகின்றது எனவும் தெரிவித்தார். ஆண்டிற்கு 8 முறை தேங்காய் இறக்கும் நிலையில் , ஓரே ஒரு முறை மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகின்றது. 7 முறை கொள்முதல் செய்யப்படுவதில்லை எனவும் அதை யார் கொள்முதல் செய்வார் என தெரிவித்தார்.

மேலும் தேங்காய் எண்ணெய் சாப்பிட கூடாது என்பதை போல கொண்டு சென்று விட்டனர், தேங்காய் எண்ணெய்யை பயன் படுத்தலாம் என்பதை மத்திய,மாநில அரசுகள் விளம்பரபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொப்பரை தேங்காயினை ஓரே ஒரு முறை கொள்முதல் செய்வது என்பதை யார் கொண்டு வந்து இருந்தாலும் தவறுதான் என தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார். அப்போது விவசாயிகளுக்காக எதிரும் புதிருமாக இருக்கும் நாங்கள் எல்லாம் ஒன்றாக இங்கு இருக்கின்றோம் என தெரிவித்தார்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்டு கொப்பரை,கொப்பரை என்கின்றீர்கள் என பொள்ளாச்சி ஜெயராமனை கிண்டல் செய்வேன், அவர் நல்ல நண்பர் என தெரிவித்த அவர், தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக சப்போர்ட் பண்ண முடியவில்லை, தென்னை வாரியம் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்திர் 41 இடங்களில் கொப்பரை கொள்முதல் செய்கின்றோம் என தெரிவித்த அவர், நாங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டும்தான் செய்ய முடியும் எனவும் கூறினார்.விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் இந்த அரசு தாக்கல் செய்கிறது, விவசாயத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றது இந்த அரசு என தெரிவித்தார்.

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருங்கால பட்ஜெட் இருக்கும் என தெரிவித்தார். 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை இது வரை கொள்முதல் செய்து இருக்கின்றோம், மத்திய அரசு அனுமதி கொடுத்தால் இன்னும் அதிகமாக கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். ஆண்டு முழுவதிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம், மத்திய அமைச்சரிடம் பேசி வானதி சீனிவாசன் அனுமதி வாங்கி தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தென்னை வாரியம் மத்திய அரசிடம் இருப்பதால் விலை நிர்ணயத்தை அவர்கள் செய்கின்றனர், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.தேங்காய் எண்ணெய்யை ரேசன்கடைகளில் விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சரிடம் பேசி அதற்கு சாத்தியம் இருக்கின்றதா என பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர், தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் நம்மூர் மக்களிடம் இருக்கிறது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இறுதியாக பேசிய மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு, இதை பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு என தெரிவித்தார். தென்னை விவசாயம் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தேங்காய் உற்பத்தில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கின்றது, இதில் தமிழகம் முக்கிய இடத்தில் குறிப்பாக கோவை முக்கிய இடத்தில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் 21 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் விவசாயம் நடைபெறுகின்றது, தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகின்றது என தெரிவித்த அவர்,

தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும் எனவும் தெரிவித்தார்.தென்னை விவசாயத்துக்கு எல்லாவிதமான உதவிகள் செய்தாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றது, அதற்கு உரிய இழப்பீடு மாநில அரசு மூலம் மத்திய அரசு கொடுக்கின்றது என தெரிவித்த அவர், கொரொனா நெருக்கடியில் சிக்கிய விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியின் முயற்சியால் விவசாயதொழில் பாதுகாக்கபட்டது, உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது எனவும்,கிஷான் கிரிடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கான கடன் தொகை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

விவசாயத்தின் உட்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது, அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த விழாவின் மேடையில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி இருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து பெரியார் திராவிட கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இது அரசு விழாவா? கட்சி விழாவா? என ஐயப்பாடு உள்ளது என வினாவி உள்ளனர்.

மத்திய அமைச்சரும் மாநில அமைச்சரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத கோவை மாவட்ட பிஜேபி தலைவர் விழா மேடையில் அமர்ந்திருப்பது அரசு விதிகள் பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சி விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தினர் போக்கு கண்டனத்துக்குரியது இந்த போக்கை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் விழா மேடையில் பிஜேபி தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!