கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள்.
Protests Today - கோவை கணபதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நல குழுவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கணபதி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், கோவை மாநகராட்சியில் 13 ஆண்டுகள் தூய்மைப் பணி செய்யும் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு தூய்மை பணி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தினசரி ஊதியமாக 707 வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைக்கு மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வஉசி மைதானம் அல்லது மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu