தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
X

திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம்.

தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இவருக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த, காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஆறுமுக நயினாருக்கும் கடந்தாண்டு ஜூன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர்.

இதனையடுத்து இளவரசியின் விருப்பிற்கு மாறாக, மாத்திரைகளை கொடுத்து உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து 14 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருந்துவிட்டு வேலை நிமித்தமாக கோவைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து லதா என்ற பெண் இளவரசியிடம் செல்போனில், உனது கணவரின் பெண் தோழி எனக்கூறி ஆபாசமாக பேசியுள்ளார். அதே எண்ணில் இருந்து ஆறுமுக நயினாரும், சந்தர்ப்ப சூழலால், உன்னை திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. நீ ரொம்ப ஆசைப்படாதே , முடிந்தால் எங்கள் வீட்டில் இரு, இல்லையென்றால் உன் வீட்டிற்கு போய்விடு என மிரடியுள்ளார். இதனையடுத்து இளவரசியின் தாய் ஆறுமுக நயினாரின் பெற்றோர்களிடம் பேசியுள்ளனர். அவர்களும் என் மகன் எஸ்பி வரைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்க தகுதி என்ன என் தகுதி என கேட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.

ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்துகொண்டு, முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் மனுவை அளிக்க வந்தார். இவர் தற்போது கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்