ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு என புகார் மனு

ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு என புகார் மனு

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

இவ்வாண்டு வருகிற 9ம் தேதி இப்போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கோவையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள், செட்டிபாளையம் பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு வருகிற 9ம் தேதி இப்போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரையினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பைச் சேர்ந்த ஜெய் கார்த்திக், 28 மாவட்டங்களின் பொருப்பாளர்கள் மனு அளிக்க வந்துள்ளதாகவும், கோவை ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு தரப்பினருக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இப்போட்டிகள் நடைபெறுவதற்காக அனைத்து தரப்பினரும் இணைந்து போராடிய நிலையில், ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு மட்டும் டோக்கன்கள் வழங்குவது ஏற்புடையது அல்ல எனவும் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் மெரினாவில் சிலை வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டோக்கன்கள் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்தால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags

Next Story