கோவையில் குண்டும் குழியுமான சாலைகள் சீர் படுத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

கோவையில் குண்டும் குழியுமான சாலைகள் சீர் படுத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
X

முத்தரசன்.

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை பாப்பநாயக்கன் புதூர் கிளை மாநாடு நடைபெற்றது. அப்போது முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் நிரந்தரமாக இ-சேவை மையத்தை அமைத்து விட வேண்டும், சமுதாயக் கூடம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

குண்டும் குழியுமான சாலைகள் சீர் படுத்தி சாக்கடை கால்வாய்களை செப்பனிட வேண்டும், அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டின் வாயிலாக பொது மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி ஒப்புதல் வழங்கி அரசுக்கு கோரிக்கை விடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!