கோவையில் இளம் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்.
வழக்கு விவகாரத்தில் தன்னை பணி செய்ய விடாமல் மூத்த வழக்கறிஞர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி இளம் வழக்கறிஞர் நடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கறிஞர் தீபக் குமார் என்பவரிடம் 20 லட்சம் ருபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞர்கள் மீரா லோகநாதன், ராஜராஜேஸ்வரி, விஜயசந்திரலட்சுமி ஆகியோர் தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்றும் பொறுப்பை, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமேஸ்வர ராமன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமனை தனியார் விடுதிக்கு அழைத்த பெண் வழக்கறிஞர்களின் நண்பர் கிருஷ்ணராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இவ்விவகாரத்தில் தலையிட்டால் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பொய் புகார் அளிப்போம் என்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த ராமன் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி நீதிமன்ற வளாகம் உள்ள பரபரப்பான சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அப்போது சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க ராமன் இவ்விவகாரம் தொடர்பாக மீண்டும் புகார் அளிக்க உள்ளதாகவும் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் அவரது நண்பர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu